Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

சென்னையில் 7,652 +ve கேஸ்: அதிகபட்சம் எங்கு? எத்தனை?

சென்னையில் 7,652 +ve கேஸ்: அதிகபட்சம் எங்கு? எத்தனை?
, புதன், 20 மே 2020 (11:55 IST)
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல். 
 
தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நேற்று 668. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 12,448 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
மேலும் பாதிப்பு அடைந்த 668 பேர்களில் சென்னையில் மட்டும் 552 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள். எனவே, சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,652 ஆக உயர்ந்துள்ளது.  
 
தமிழகத்தில் இறப்பு விகிதம் 0.68 சதவீதமாக உள்ளது. நாடு முழுவதும் உள்ள இறப்பு விகிதங்களை ஒப்பிடும் போது இறப்பு விகிதம் தமிழகத்தில்தான் குறைவாக உள்ளது என்பது கூடுதல் தகவல். 
 
சென்னையில் உள்ள 15 மண்டல வாரியாக பார்கையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 1,423 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கோடம்பாக்கத்தில் 1,137, திரு.வி.க நகரில் 900, தேனாம்பேட்டையில் 822, தண்டையார்பேட்டையில் 723 பேருக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரம்ஜான் தொழுகைகளை வீடுகளில் நடத்துங்கள்! – தலைமை காஜி அறிவிப்பு!