தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் வரும் எல்லா ஞாயிற்றுக் கிழமையும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக ஜூலை மாதம் முழுவதும் எல்லா ஞாயிற்றுக் கிழமையும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஊரடங்கை ஆகஸ்ட் மாதம் முழுவதும் நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது.
அதன்படி ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் லாக்டவுன் இருக்கும் என்றும் அன்றைய தினங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் எனவும் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 5 ஞாயிற்றுக் கிழமை இருப்பதால் குடிகாரர்களுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.