பொங்கல்: இலவசமாக ரூ.100, அரசி, சர்க்கரை - ஜெயலலிதா
, ஞாயிறு, 6 ஜனவரி 2013 (12:33 IST)
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி அரசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக ரூ.100, அரிசி, சர்க்கரை வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் மோசமான பருவநிலை நிலவுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்காக அரிசி பெறும் சுமார் 1.84 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.160 மதிப்பிலுள்ள சிறப்புப் பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிக்கப்படும்.இந்தத் தொகுப்பில் ரூ.20 மதிப்பிலான 1 கிலோ பச்சரிசி, ரூ.40 மதிப்பிலான 1 கிலோ சர்க்கரை மற்றும் பொங்கல் பண்டிகைக்கான இதர பொருள்கள் வாங்குவதற்காக ரூ.100 ரொக்கம் ஆகியன அடங்கும்.இந்தத் தொகுப்பு அந்தந்த ரேஷன் கடைகள் மூலம் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். இதனால் அரசுக்கு கூடுதலாக ரூ.300 கோடி செலவு ஏற்படும். அரசின் இந்த அறிவிப்பு, பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை செய்யும். அனைவருக்கும் எனது பொங்கல் திருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.