Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் உபதேசம்; திருநீறு

பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் உபதேசம்; திருநீறு
'விபூதி பூதிரைச்வர்யம்' என்று ‘அமர கோச’த்தில் உள்ளது. அதாவது, விபூதி என்பதும், ஐச்வர்யம் என்பதும் ஒரே பொருள் தரும். பஸ்பமாகிய விபூதி, இவ்விதம் கர்மங்களை எரிந்த பின் நிற்கும் ஞானத்துக்கே அடையாளமாகும்.

 
எந்தப் பொருளையும் தீயிலிட்டால் முதலில் அது கருப்பாக ஆகும். பிறகு இன்னும் அக்னியுடம் போட்டால் நீற்றுப் போகும். சுத்த வெளுப்பாக ஆகிவிடும். அப்புறம் தீயில் போட்டால் அது மாறாது. அதுவே முடிவான நிலை. இப்படி நீற்றுப்போனதே திருநீறு. நீறு பஸ்மம் எனப்படும். ஈசுவரன் மகா பஸ்மம். 
 
எல்லாம் அழிந்த பின்னும் இவற்றை அழித்துவிட்டு எஞ்சி நிற்கிற, அழியாத சத்யமான மகா பஸ்மம். அவன் பஸ்மமாக நீற்று வெளுத்துப் போனதற்கு முந்திய மாறுதல் கருப்பு. அதுதான் கரி. நிலக்கரிதான் இவ்வுலக ஐஸ்வரியத்தில் இக்காலத்தில் முதலிடம் பெற்றுள்ளது.
 
ரொம்பவும் விலைமதிப்பான வைரமும் அதுதான். இந்தக் கரியாக மாறிய பொருளைவிட, மிகவும் உயர்ந்தது நீற்றுப்போன  திருநீறு. திருநீற்றுக்கு மேலான பொருளே கிடையாது.
 
பல வர்ணங்களைக்கொண்ட பொருட்களைக் காண்கிறோம். ஆனால், இந்த வர்ணங்களெல்லாம் வஸ்துவை எரித்த பின் மாறிவிடுகின்றன. எல்லாம் கடைசியில் வெளுத்துப் போய்விடும். நாம் 'சாயம் வெளுத்துப் போய்விட்டது' என்கிறோம். சாயம்  என்பது வேஷம். வேஷம் போனபின் இருப்பதே மெய். மெய்யான ஆத்மாவின் தூய்மைக்குப் பெரிய அடையாளமாக இருப்பது  விபூதியான். இதை இந்தப் பொய்யான மெய் (தேகம்) முழுவதிலும் பூசிக்கொள்ள வேண்டும். எல்லாம் எரிந்த பின் எஞ்சி நிற்பது விபூதியின் வெண்மை ஒன்றுதான். மற்ற சாயமெல்லாம் பொய். வெண்மையே உண்மை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜோதிட ரீதியாக ஓரைகள் எனப்படுவது என்ன? அவற்றில் சுப காரியங்கள் செய்வது சரியா?