Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

சுவாமி விவேகானந்தரின் ஆன்மீக துளிகள்....!

சுவாமி விவேகானந்தரின் ஆன்மீக துளிகள்....!
இந்தியாவின் பாமர மக்களாகிய இந்த ஏழை எளியவர்களை நாம் உயர்த்த வேண்டும். அவர்களின் முன்னேற்றத்திற்கு உரிய கருத்துக்களை நம்பிக்கயோடும், சிரத்தையோடும், அன்பான சொற்களால் அவர்களுக்கு விரிவாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
நோயாளிகளுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய். பசியால் வாடுபவனுக்கு உணவு கொடு. அறியாமையில் உள்ளவனுக்கு உன்னால் முடிந்த அளவிற்கு கல்வியறிவைப் புகட்டு. இதுவே உனது கடமையாக்கிக் கொள்.
 
உண்மைக்காக எதையும் துறக்கலாம்; ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே.
 
வலிமையே மகிழ்ச்சிகரமான, நிரந்தரமான, வளமான, அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.
 
தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள். இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல்  படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை.
 
வீரர்களே, கனவுகளிலிருந்து விழித்தெழுங்கள்! தளைகளிலிருந்து நீங்கள் விடுபடுங்கள்! இளைஞனே, வலிமை, அளவற்ற வலிமை இதுவே இப்போது தேவை.
 
சிறந்த லட்சியத்துடன் முறையான வழியைப் பின்பற்றித் தைரியத்துடன் வீரனாக விளங்கு! உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது.

நமது சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல. மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று நான் சொல்கிறேன்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருச்செந்தூரில் கொண்டாடப்படும் கந்த சஷ்டி விழாவின் நோக்கம் என்ன...?