Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

பன்னிரு மாதங்களில் வரும் பெளர்ணமி வழிபாட்டு பலன்கள் !!

full moon day
, திங்கள், 13 ஜூன் 2022 (17:55 IST)
சித்திரை முதற்கொண்டு பன்னிரு மாதங்களிலும் வரும் பெளர்ணமி திருநாளில் விரதம் இருந்து சிவனாரை வழிபடுவது மிகவும் சிறப்பு.


அமாவாசை மற்றும் பௌர்ணமி என்பது ஆன்மீகத்தில் மட்டுமல்ல, அறிவியலிலும் மிகவும் முக்கியமான நாட்கள். இந்த இரு நாட்களிலும் விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்வது சிறப்பு.

இந்து மதத்தில் ஒவ்வொரு மாத பவுர்ணமிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. மாத பவுர்ணமிகளின் முக்கியத்துவம் என்ன என்பதை தெரிந்துக் கொள்வோம்.

தமிழ் ஆண்டின் முதல் மாதமான சித்திரையில் வரும் பெளர்ணமி சித்ரா பௌர்ணமி. மனிதராக பிறந்த அனைவரின் செயல்களையும் சித்ர குப்தன் தான் கணக்கு வைத்துக் கொள்வார் என்பது நம்பிக்கை. சித்திரை மாதம் வரும் பெளர்ணமி  சித்ரகுபதனை வணங்கும் நாள்.

சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள், சித்ரா பெளர்ணமி  அன்று சித்ரகுப்தனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவார்கள். மேலும் சித்ரா பௌர்ணமி அன்று அம்பாள் வழிபாடு செய்வதால் திருமண யோகம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்துடன் கூடிய சித்ரா பௌர்ணமி வந்தால் மிகவும் விசேஷமானது.

ஆனி மாத பௌர்ணமி அன்று மா, பலா, வாழை உட்பட கனிகளை படைத்து இறைவனை வணங்குவது சிறப்பு. ஆனி பெளர்ணமி திருவையாற்றில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குலதெய்வ வழிபாடு செய்ய உகந்த பெளர்ணமி !!