Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

பூஜை அறையில் ஏன் தண்ணீர் வைக்கவேண்டும் தெரியுமா..?

பூஜை அறையில் ஏன் தண்ணீர் வைக்கவேண்டும் தெரியுமா..?
தினமும் நாம் பூஜையின் போது சுவாமிக்கு நெய்வேத்தியம் படைப்பதுண்டு. எச்சில் படாத உணவுகள், பழங்கள் ஆகியவற்றை நாம் கடவுளுக்கு வைக்கலாம். நம்முடைய பூஜை அறை மண் பானையிலேயோ அல்லது செம்பு பாத்திரத்திலேயோ தண்ணீரை நிரப்பி வைப்பது  மிகவும் நல்ல பலனை கொடுக்கும்.
வழிப்பாட்டின் போது தினமும் தியானத்தில் அமர்ந்து நமக்கு பிடித்த தெய்வத்தின் மூல மந்திரத்தை சொல்ல வேண்டும். அவ்வாறு செய்வதால் நீங்கள் சொல்லும் மந்திரத்தின் (நேர்மறை ஆற்றல்) அதிர்வலைகள் அந்த தண்ணீரில் இறங்கும். இவ்வாறு செய்து அந்த தண்ணீரை   அருந்துவதால் நன்மைகள் உண்டாகும்.
 
பூஜையின்போது தீபாராதனை காட்டி, தெரிந்த தெய்வப் பாடல்களைப் பாடி வழிபடலாம். எந்தக் காரணத்தை முன்னிட்டும் இரும்புப்   பொருள்களை பூஜைக்குப் பயன்படுத்தக்கூடாது. இரும்பு யமனுக்கு உரியது. இரும்பினால் நேர்மறை சக்திகளை கிரகிக்க முடியாது. வெள்ளி,   தாமிரம், ஈயம் பூசிய பித்தளை, மண்ணால் ஆன பூஜைப் பாத்திரங்களைப் பயன்படுத்தலாம்.
 
ஒவ்வொரு நாள் பூஜையின்போதும் சிறிய பாத்திரத்தில் தண்ணீர் வைத்து பூஜை செய்ய வேண்டும். அடுத்த நாள் அதைக் கூரையில் ஊற்றிவிட வேண்டும். இப்படிச் செய்வதால் துர்சக்திகள் நம் வீட்டை அண்டாது.
 
பூஜையின்போது மணியோசை எழுப்புவதும் கூட துர்சக்திகள் நெருங்காமல் இருப்பதற்குத்தான். மணியின் இனிய ஓசையானது தீய சக்திகளை  விரட்டி, தெய்விக சக்தியை வீட்டில் நிலவச் செய்யும்  வல்லமை கொண்டது. 
 
தினமும் மணியோசை எழுப்பி பூஜை செய்பவர்களின் வீடுகளில் தெய்வ கடாட்சம் நிரம்பி, ஆரோக்கியமும் சகல சௌபாக்கியங்களும்  பெருகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாஸ்து முறைப்படி நான்கு மூலைகளில் வைக்கவேண்டிய, வைக்ககூடாத பொருட்கள் என்ன...?