ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும். வேத புராணங்களும் கூட விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன.
நாம் கோவிலுக்கு செல்லும்போது நெய் தீபம் ஏற்றச்சொல்லி பலகை வைத்து இருப்பார்கள். அதில் நாம் குடும்பத்தார் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு தீபம் என்றோ அல்லது மூன்று, ஐந்து, ஒன்பது என்ற எண்ணிக்கையிலோ விளக்கேத்திட்டு வந்திடுவோம். இது, தவறான செயலாகும்.
எந்த தெய்வத்துக்கு எத்தனை தீபம் ஏற்றவேண்டும் என்ற விதி இருக்கு. அதை தெரிந்துக்கொண்டு எந்த கோவிலுக்கு போனாலும் அதன்படி விளக்கேற்றி தக்க பலன் பெறலாம்.
ராகுதோஷம் - 21 தீபங்கள்
சனிதோஷம் - 9 தீபங்கள்
குரு தோஷம் - 33 தீபங்கள்
துர்க்கைக்கு - 9 தீபங்கள்
ஈஸ்வரனுக்கு - 11 தீபங்கள்
பெருமாளுக்கு - 15 தீபங்கள்
சக்திக்கு - 9 தீபங்கள்
மகாலட்சுமிக்கு - 5 தீபங்கள்
முருகனுக்கு - 9 தீபங்கள்
வினாயகருக்கு - 5 தீபங்கள்
ஆஞ்சினேயருக்கு - 5 தீபங்கள்
காலபைரவருக்கு - 1 தீபம்
திருமண தோஷம் - 21 தீபங்கள்
புத்திர தோஷம் - 51 தீபங்கள்
சர்ப்பதோஷம் - 48 தீபங்கள்
காலசர்ப்பதோஷம் - 21 தீபங்கள்
களத்திர தோஷம் - 108 தீபங்கள்
இந்த வகையில் விளக்கேற்றினால் தக்க பலன் கிடைக்கும்.