ஒவ்வொரு வகையான அபிஷேகங்களால் சிவபெருமானை வழிபட்டால், ஒவ்வொரு பலாபலன்களைத் தந்தருள்வார். மகாவிஷ்ணு அலங்கார பிரியர். மாகாதேவன் அபிஷேகப் பிரியர்.
சிவலிங்கத்துக்கு தயிர் அபிஷேகம் செய்தால், பலம், ஆரோக்கியம், தேஜஸ் கூடும். பசும்பால் அபிஷேத்தினால் சகல செளபாக்கியங்களும், ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
நல்லெண்ணெய் அபிஷேகத்தினால் எமபயம் விலகும். அருகம்புல் ஜலத்தினால் சிவனாருக்கு அபிஷேகம் செய்தால் நஷ்டமான பொருட்கள் திரும்பக் கிடைக்கும்.
பசு நெய்யினால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்யம் கிட்டும். கரும்பு ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் தனம் விருத்தியாகும். சுத்த ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் நஷ்டமானவை திரும்பக் கிடைக்கும். வில்வ ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் போக யோக பாக்கியங்கள் கிடைக்கப் பெறலாம்.
அன்னத்தினால் அபிஷேகம் செய்தால் அதிகாரம், பதவி முதலானவை கிடைக்கும். மோட்ச கதியை அடையலாம். நவரத்தின ஜ;அத்தினால் அபிஷேகம் செய்தால் தனம், தான்யம் பெருகும். வீடு, மனை யோகம் கிட்டும்.
மஞ்சள் நீரினால் அபிஷேகம் செய்தால் மங்கல காரியங்கள் தடையின்றி நிகழும். பிரதோஷம் முதலான நாட்களில், சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் செய்து, நல்ல பலன்களை பெறலாம்.