Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

இறந்தவர்களை கனவில் கண்டால் என்ன பலன் கிடைக்கும்....?

இறந்தவர்களை கனவில் கண்டால் என்ன பலன் கிடைக்கும்....?
நம்மோடு நெருங்கிப் பழகியவர்கள், எமக்கு பிடித்தவர்கள், பிரபலங்கள் போன்றோர் இறந்தால், சில நேரங்களில் எமது கனவில் அவர்களின் உருவம் வரக்கூடும். அவ்வாறு வருவதால் ஏற்படும் பலன்கள் பற்றி ஜோதிடம் என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.
நமக்கு வேண்டப்பட்ட யாராவது இறந்துவிட்டது போல கனவு வந்தால், துன்பங்கள் விலக போகிறது என்று அர்த்தம். இறந்து போனவர்களை  தூக்கி செல்வது போல கனவு வந்தால் நன்மை உண்டு.
 
இறந்தவர்கள் நம் கனவில் வந்து அழுவது போல கனவு கண்டால் நல்லதல்ல. கோவிலில் அர்ச்சனை செய்வது நல்லது. இறந்துபோன தாய் மற்றும் தந்தையை கனவில் கண்டால் கனவு கண்டவருக்கு வர இருக்கும் ஆபத்தை சுட்டிக்காட்டி எச்சரிக்க வந்தார்கள் என்று பொருள்.
 
இயற்கையாக மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கனவுகள் தொடர்பான நூல்களில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, பேரன், பேத்தி எடுத்து நன்றாக வாழ்ந்து மரணமடைந்த முன்னோர்கள் கனவில் வந்தால் அதனை ஆசி எனக் கருத வேண்டும்.
 
ஆனால் துர்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில இடர்பாடுகள் ஏற்படும். உடல் நலம் குறையலாம். விபத்து, குடும்பத்தில் வாக்குவாதம், பிரிவு உள்ளிட்டவை ஏற்படக் கூடும்.
 
இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க குலதெய்வக் கோயில் வழிபாட்டை மேற்கொள்ளலாம். பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கலாம். வஸ்திர தானம் செய்யலாம். வயதானவர்கள், பெரியவர்கள், வாழ்க்கை முழுவதும் சிறப்பாக வாழ்ந்து இயற்கை எய்தியவர்கள் கனவில்  வந்தால் கவலை கொள்ளத் தேவையில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திதி, திவசம் பற்றி சாஸ்திரம் என்ன சொல்கிறது தெரியுமா....?