Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

எந்த ராசியினருக்கு எந்த திசையில் வாசல் அமைப்பது நல்லது...?

எந்த ராசியினருக்கு எந்த திசையில் வாசல் அமைப்பது நல்லது...?
மனிதனுக்கு ஜோதிடம் பார்க்கப்படுவது போல, நாம் வாழக்கூடிய வீட்டிற்கும்,  நாம் தொழில் செய்யக்கூடிய இடத்திற்கும் நாம் பார்க்க வேண்டியது வாஸ்து சாஸ்திரம். வாஸ்து முறைப்படி நாம் வீடு அமைப்பதால் பல்வேறு வகையில் அனுகூலமான பலன்களைப் பெற முடியும்.

வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒரு சக்தி அடங்கி இருக்கிறது. அதைப் பொறுத்து எந்த பகுதியில் எதை அமைக்க வேண்டும் என்று விரிவாக 
விளக்கக்கூடியது வாஸ்து சாஸ்திரம்.
 
ஒவ்வொரு ராசிக்கும் எந்த திசையில் வீட்டின் வாசல் அமைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு நாம் வீடு கட்டும் போது அல்லது வாடகை வீட்டிற்கு போகும் போது, உங்கள் ராசிக்கு ஏற்ற வகையில் வாசல் அமைக்கப்பட்டிருக்கும் வீட்டில் நாம் குடியேறுவது அவசியம்.
 
மேஷ ராசியினர் மேற்கு தலை வாசல் வீடு கட்டுவது மிக சிறந்த பலனை தரும் அதே சமயம் தென் மேற்கு திசையில் தலைவாசல் அமைந்த விடாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம்.
 
கும்ப மீன ராசியில் பிறந்தவர்கள் வீட்டின் தலை வாசலை மேற்கு திசையில் அமைப்பது மிகவும் சிறப்பு. 
 
சூரியனின் ராசிநாதனாக கொண்ட சிம்ம ராசியினர் வீட்டின் பிரதானமான வாசலை கிழக்கு பக்கம் வைப்பது சிறப்பு. அப்படி கிழக்கு திசையில் வைக்கும்போது செல்வமும், சகல சம்பத்துகளும் வீட்டில் நிலைத்திருக்கும். அப்படி கிழக்கு திசையில் அமைக்க வாய்ப்பு இல்லையெனில் மேற்கு திசையில் அமைத்துக் கொள்ளலாம்.
 
துலாம் மற்றும் கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு கிழக்கு திசையில் வாசல்  வைப்பது மிகவும் உத்தமம். 
 
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு தெற்கு திசை சிறப்பானது. அதேசமயம் தென்மேற்கு திசையில் அதிகளவு இந்த வாசல் ஆக்கிரமித்து விடாதபடி பார்த்துக் கொள்வதும் அவசியம்.
 
மகரம் ராசி விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு தெற்கு திசை மிகவும் ஏற்றதாக இருக்கும். அதன்மூலம் உங்களின் செல்வாக்கு மதிப்பு சிறப்பாக உயரும் செல்வ நிலை எப்போதும் திருப்திகரமாக இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடன் பிரச்சனைகள் விலக செய்யவேண்டிய பரிகார முறைகள் !!