செவ்வாய், மற்றும் புதன் கிழமைகளில் பகலிலும் வெள்ளிக்கிழமை முழு நாளுமே குத்து விளக்கைத் துலக்கக் கூடாது. சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது.
திருப்பதி, திருத்தணி, பழநி, திருச்செந்தூர் போன்ற கோவில்களுக்கு சென்றால் அங்கிருந்து நேராக அவரவர் வீட்டிற்குத் தான் செல்ல வேண்டும். வேறு எங்கும் செல்லக்கூடாது.
ருத்ராட்சம் அணிவோர் இறுதிச் சடங்குகளுக்குச் செல்லும் பொழுது அதைக் கழற்றி வைத்து விட்டுத் தான் செல்ல வேண்டும்.
சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது. அர்ச்சனைப் பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லக் கூடாது.
கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்துக் கை, கால்கள் கழுவலாம். ஆனால் குளிக்கக் கூடாது. எலுமிச்சம் பழத்தில் தீபம் ஏற்றுவது தவறு.
இறந்த முன்னோர்களின் படங்களை, சாமி படங்களுடன் வைத்து வணங்குதல் கூடாது. தனியாக வீட்டில் வேறொரு இடத்தில் வைத்து வணங்கலாம்.
வாழைப்பழம் சாப்பிட்ட பின் மோர் சாப்பிடக் கூடாது. பூஜை அறையில் தெய்வங்களை வடக்குப் பார்த்து வைக்கக் கூடாது.