மாசி மாதத்தின் மக நட்சத்திர நாளில், நீராடுவது மகத்தான புண்ணியங்களைச் சேர்க்கும். மாசிமகம் என்றாலே வடக்கே நடைபெறுகிற கும்பமேளாவும், தெற்கே கும்பகோணத்தில் நடைபெறுகிற மகாமகத் திருவிழாவும் தான் நம் நினைவிற்கு வரும்.
மாசிமாதம் மகாவிஷ்ணுவிற்கான மாதமாகும். எனவே, இம்மாதம் முழுவதும் மகாவிஷ்ணுவை அதிகாலையில் துளசியால் அர்ச்சித்து வழிபட்டால் வாழ்வில் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகும்.
இந்நாளில் விரதமிருந்து, நீர்நிலைகளில் நீராடி விஷ்ணுவை வழிபட்டால் இந்தப் பிறப்பு மட்டுமல்லாமல் முன் ஜென்மங்களில் செய்த பாவங்கள் அனைத்தும் விலகியோடும். மேலும், சகல நலன்களையும் பெற்று வளமான வாழ்க்கை அமையும்.
தாமரை மணிமாலை இருக்கும் இடத்தைச் சுற்றிலும் நல்ல விஷயங்களே நடக்கும். தாமரை மணிமாலைக்கு பணத்தை வசீகரிக்கும் சக்தி உண்டு. குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனை, பொருளாதாரத்தில் நலிவு போன்ற பலவற்றுக்கும் தீர்வை அளிக்கிறது தாமரை மணிமாலை.
சைவக் கோயில்கள் மட்டுமின்றி, வைணவக் கோயில்களிலும் மாசிமகத்தின் போது விசேஷ வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.