Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

விநாயகரை வழிபட உகந்த நாட்களும் அற்புத பலன்களும் !!

விநாயகரை வழிபட உகந்த நாட்களும் அற்புத பலன்களும் !!
, செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (18:29 IST)
விநாயகர் தன்னை பார்த்து சிரித்த சந்திரனை, ஒளியில்லாமல் போகும்படி சபித்தார். கடும் தவத்துக்குப் பிறகு ஒரு சதுர்த்தி தினத்தில், சந்திரனின் சாபத்தை நீக்கினார் கணநாதர்.


எனவே, சந்திர பலம் பெற விரும்புவோர் சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டும். ''ஸ்ரீகிருஷ்ணர், பிரம்மா, புருசுண்டி முனிவர், செவ்வாய் ஆகியோர் இந்தச் சதுர்த்தி விரதத்தை மேற்கொண்டு வரம் பெற்றார்கள் என்கின்றன ஞான நூல்கள்.

ஆவணி மாதத்தில் வருகிற விநாயக சதுர்த்தி தினத்தில் , சுக்லபட்ச சதுர்த்தி விரதத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து மாதம் தோறும் வருகிற சதுர்த்தி நாள்களில் விரதமிருந்து விநாயகரை வழிபடலாம். 11 சதுர்த்தி தினங்களில் விரதமிருந்து சதுர்த்தி  விரதத்தைப் பூர்த்தி செய்யலாம்.

சதுர்த்தி அன்று, காலையில் குளித்து விட்டு, அருகிலுள்ள ஆலயத்துக்கு செல்ல வேண்டும்  பிள்ளையாரை 11 முறை வலம் வர வேண்டும். அறுகம்புல் கொடுத்து, விநாயகருக்கு அர்ச்ச னை செய்து, நெற்றிப்பொட்டில் குட்டிக்கொ ண்டும், தோப்புக்கரணம் போட்டும் விநாயகரை வணங்க வேண்டும்.

விநாயகருக்குப் பிடித்த இலை வன்னி இலை. வன்னி இலைகளால் விநாயகரைப் பூஜிப்பது சிறப்பான பலன்களை தரும். அதிலும் வன்னி மரத்தடியே உறையும் கணபதி ஆனந்தமயமானவர். நினைத்த காரியம் தடையில்லாமல் நடக்க விரும்புப வர்கள், இந்த வன்னி விநாய கரை வலம் வந்து வேண்டினால், வேண்டியது கிடைக் கும் என்பது ஐதீகம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சங்கடஹர சதுர்த்தி செவ்வாய் கிழமைகளில் வருவதால் என்ன சிறப்புக்கள்...?