Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

“ஓம்” என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரிப்பதால் உண்டாகும் பலன்கள்...!!

Mantra
ஓம் என்னும் மந்திரம், ஆ, ஓ, ம் ஆகிய மூன்று ஓசைகளால் உருவான ஒரு அற்புத மந்திரம் ஆகும். இந்த மந்திரத்தில் உள்ள மூன்று ஓசைகளையும் ஒருவர் எழுப்பும் சமயத்தில் உடலின் கீழ் பகுதி முதல் வயிற்று பகுதி வரை இயக்கம் பெறுகிறது.
“ஓ” என்ற ஓசையை உச்சரிக்கும் பொழுது மார்பு பகுதி சீரான இயக்கத்தை பெறுகிறது. “ம்” என்ற ஓசையை உச்சரிக்கும் பொழுது நமது  மூளை பகுதி தூண்டப்படுகிறது. அதோடு நமது முகத்தில் உள்ள தசைகளும் நன்கு வேலை செய்கின்றன.
 
ஒருவரது மனதை ஒருமைப்படுத்தி அவரது எண்ண ஓட்டங்களை கட்டுப்படுத்தி தியான நிலைக்கு இட்டு செல்லும் அற்புத சக்தி ஓம் என்னும் மந்திரத்திற்கு உள்ளது. இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜெபிப்பதன் மூலம் நமது உடலின் இயக்கம் சீரடைகிறது. நமக்குள் இருக்கும் எதிர்மறை  ஆற்றல் அழிந்து நேர்மறை ஆற்றல் பெருகுகிறது.
 
தினமும் காலையில் 20 நிமிடங்கள் தியான நிலையில் அமர்ந்து வெறும் ஓம் என்ற மந்திரத்தை மட்டும் கூறினாலே போதும் அந்த நாள்  முழுக்க நாம் சிறப்பாக செயல்பட அந்த மந்திரம் பல அற்புத ஆற்றல்களை நமது உடலிற்கு தருகிறது. அதாவது இதன் மூலம் எண்டார்பின் என்னும் ஒருவகை ஹார்மோன் சுருக்கப்பட்டு நம்மை உற்சாகமாக வைத்துக்கொள்ள “ஓம்” என்னும் பிரணவ மந்திரம் உதவுகிறது என்று  நவீன ஆய்வுகள் கூறுகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருஷ்டி தோஷங்களை போக்கும் எலுமிச்சம் பழம்..!!