சனிப்பெயர்ச்சியில் ஒவ்வொரு ராசியும் சில கஷ்டங்களை எதிர்கொண்டே ஆக வேண்டும். கிரகங்களிலேயே மிக சக்தி வாய்ந்த கிரக காரகனாகவும், நீதிமானாகவும் திகழும் சனீஸ்வரரின் பிடியில் இருப்பவர்கள், எறும்பிற்கு உணவுகளை அளிப்பதன் மூலம் கஷ்டங்களில் இருந்து விடுபடலாம்.
பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அதை நன்கு பொடி செய்து சூரிய நமஸ்காரம் செய்து விட்டு விநாயகரை வணங்க வேண்டும். பிறகு விநாயகரை மூன்று சுற்ற வேண்டும். அப்பொழுது கையில் உள்ள அரிசியை போட வேண்டும். அதை எறும்புகள் தூக்கி செல்லும் அப்படி தூக்கி சென்றால் நமது பாவங்களில் பெரும்பாலனவை நம்மை விட்டு போய்விடும்.
வன்னி மரத்தடி விநாயகர் கோவில் என்றால் அது இன்னும் விசேஷம். சனிக் கிழமைகளில் இதை செய்ய வேண்டும். பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்துக்காக சேமித்து வைத்து கொள்ளும். இதை சனிக்கிழமைகளில் செய்ய வேண்டும். இரண்டரை ஆண்டுகளுக்கு எறும்புக்கு அந்த உணவு போதும். இதை முப்பத்துமுக்கோடி தேவர்களும் பார்த்து கொண்டிருப்பார்கள். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை கிரக நிலை மாறும். அப்பொழுது பரிகாரம் வலுவிழறந்துவிடும்.
ஒரு எறும்பு சாப்பிட்டால் 108 ஏழைகள் சாப்பிட்டதற்கு சமம். இதன் மூலம் இந்த பரிகாரத்தின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். இந்த பரிகாரத்தை அடிக்கடி செய்தால் சனிபகவானின் தொல்லைகளில் இருந்து தப்பிக்கலாம்.