Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்வதால் பெற்று தரும் பலன்கள் !!

சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்வதால் பெற்று தரும் பலன்கள் !!
சிவபெருமானுக்கு பிரியமான பத்திரம் வில்வமாகும். ஒரு வில்வத்தினால் பூசை செய்தால் அது லட்சம் ஸ்வர்ண புஷ்பத்துக்குச் சமமாகும். வில்வத்தில் லட்சுமி வசம் செய்கிறாள். வடமொழியில் வில்வம் ஸ்ரீபலம். சிரேஷ்ட வில்வம். கந்தபலம் எனப் பல பெயர்களால் சுட்டப்படுகிறது.

மண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் (உயிர்களின்) பாவங்களைப் போக்குவன ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது வில்வம். எனவே சிவபெருமானின் தலவிருட்சம் ஆகும் இவ்விருட்சத்தைப் பூசிப்பவர்கள் சகல சித்திகளும் ,நன்மைகளும் அடைவார்கள்
 
வில்வத்தின் பெருமையை சாஸ்திரங்கள், புராணங்கள் தெளிவாக கூறுகின்றன. வில்வத்தின் மூன்று இலைகளும் சிவன் ஏந்தியுள்ள திரிசூலத்தின் வடிவத்தையும்  இறைவனின் முக்குணங்களையும் குறிப்பனவாகவும் விளங்குகின்றன
 
ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியும் என உணர்ந்த வேதங்கள் தாங்கள் அழியாதிருக்க என்னவழி என ஈசனிடம் கேட்க ஈசனும் திருவைகாவூர் (திருகருகாவூர்) திருத்தலத்தில் வில்வ மரத்தின் வடிவில் நின்று தவம் செய்யமாறு அருளினார். அதன்படி வேதங்களும் வில்வமரங்களாகத் தவமியற்றியதால் திருவைகாவூர் என்ற ஊர் வில்வராண்யம் எனச் சிறப்புப் பெயர் பெற்றது
 
சிவன் திருவாதிரை நட்சத்திரம். அது எரி நட்சத்திரங்களாக விளங்குவதால் சிவனின் சூட்டினைத் (வெப்பத்தை) தணிக்க எம் முன்னோர்கள் குளிர்மை பொருந்திய  வில்வத்தை சாத்தி வழிபட்டுள்ளனர்.
 
வில்வமரத்தை வீட்டிலும், திருக்கோவில்களிலும் வளர்ப்பதால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். ஒரு வில்வத்தை சிவனுக்கு அர்ப்பணிப்பதால் சகல பாவங்களும், துன்பங்களும் சூரியனைக் கண்ட பனி போல் நீங்கி அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூரியனை வணங்குவதால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டு தெரியுமா...?