Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகாவிஷ்ணுவையும் மஹாலக்ஷ்மியையும் வழிபட உகந்த காலங்கள் என்ன...?

மகாவிஷ்ணுவையும் மஹாலக்ஷ்மியையும் வழிபட உகந்த காலங்கள் என்ன...?
ஏகாதசியை விடவும் மிகவும் சிறந்த பலனைத் தர வல்லது விஷ்ணுபதி புண்யகாலம் ஆகும். ஒவ்வொரு வருடமும் நான்கு விஷ்ணுபதி புண்ய காலங்கள் வருவது  உண்டு.

தமிழ் மாத கணக்கின்படி மாசி, வைகாசி, ஆவணி, கார்த்திகை மாதங்களில் இந்த விஷ்ணுபதி புண்யகாலம் வருகிறது. அன்றைய தினத்தில் அதிகாலை 1:30 மணி முதல் காலை 10:30 மணி வரை இந்த புண்ய கால நேரம் வருகிறது.
 
முழுமையாக 9 மணி நேரம் இந்த புண்ய காலம் அமைகிறது. நாம் மகாவிஷ்ணுவையும் மஹாலக்ஷ்மியையும் மனதார வழிபட்டு நமது எல்லா தேவைகளையும்  வேண்டுதல்களையும் கூறி பிரார்த்தனை புரியலாம். 
 
ஸ்ரீ விஷ்ணு மற்றும் ஸ்ரீ தேவியினுடைய துதிகளை கூறி நமது சக்திக்கு இயன்ற பூஜைகளை செய்யலாம். முறைப்படி பூஜைசெய்யத்தெரிந்தவர்கள் அவ்விதம் செய்யலாம். அருகில் உள்ள விஷ்ணு ஆலயத்திற்கு அந்த குறிப்பிட்ட நேரத்தில் சென்று வழிபடலாம். 
 
துளசிபூஜை, கோ பூஜை மற்றும் ஸ்ரீதேவிக்குப் ப்ரீத்தியைத் தரக்கூடிய காரியங்களை எல்லாம் சக்திக்குத் தகுந்தவாறு செய்யலாம் . அதே போன்று அன்றைய தினத்திலே விரத நாட்களில்  செய்யக் கூடாத செயல்களைத் தவிர்ப்பது நன்று.
 
ஒருவர் ஒரு முறை இந்த விஷ்ணுபதி புண்ய கால விரதத்தை அனுஷ்டிப்பது, பல ஏகாதசி விரதங்களை அனுஷ்டிப்பதற்கு சமம் எனசாஸ்திரங்கள் கூறுகின்றன.
 
தமிழ் ஆண்டுகள் மொத்தம் 60 ஆகும். ஒவ்வொரு ஆண்டிலும் வரக்கூடிய நான்கு விஷ்ணுபதி புண்ய காலங்களும் ஒவ்வொரு விதத்தில் வேறுபடும். எனவே  இந்தமுறை நாம் ஒரு விஷ்ணுபதி புண்யகாலத்தை தவறவிட்டால் அடுத்து இதேபோன்ற ஒரு புண்யகாலம் வருவதற்கு மீண்டும் 60 ஆண்டுகள் ஆகும். எனவே அரிதான இந்த வாய்ப்பினை தவற விடாமல் இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் உலகாதாயமான தேவைகளையும்.. மகிழ்ச்சியான மற்றும் செல்வ  செழிப்புமிக்க வளமான வாழ்வினையும் பெற முடியும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தல விருட்சங்கள் தரும் அற்புத பலன்கள் பற்றி தெரிந்துகொள்வோம் !!