ஒருவர் விபூதி தனது நெற்றியில் பூசும்போது வடதிசை அல்லது கிழக்கு திசைநோக்கி நின்று கொண்டு பூச வேண்டும். திருநீரை எடுக்கும்போது திருச்சிற்றம்பலம் என்றும், நெற்றியில் பூசும்போது சிவாய நம, அல்லது சிவ சிவ என்று திருநாமம் உச்சரித்துக்கொண்டே பூச வேண்டும்.
விபூதியால் நெற்றியில் போடும் மூன்று கோடுகளுக்கும் மகிமை உள்ளது. அவை என்னவென்று பார்க்கலாம். முதல் கோடு: அகாரம், கார்ஹபத்யம், ரிக்வேதம், பூலோகம், ராஜோகுணம், ஆத்மா, க்ரியாசக்தி, அதிகாலை மந்திரத்தின் தேவதை மஹாதேவன் ஆகியவை அடங்கியது.
இரண்டாவது கோடு: உகாரம், தக்ஷிணாக்னி, ஆகாயம், யஜூர்வேதம், சத்வகுணம், பகல்நேர மந்திரதேவதை இச்சாசக்தி, அந்தராத்மா, மகேஸ்வரன் ஆகியோர் இதில் உள்ளனர்.
மூன்றாவது கோடு: மகாரம், ஆஹவனியம், பரமாத்மா, தமோகுணம், சுவர்க்கம், ஞானசக்தி, ஸாமவேதம் மாலைநேர மந்திர தேவதை, சிவன் ஆகியோர் இதில் உள்ளனர். விபூதியை எடுக்க சில விரல்களை பயன்படுத்தும் போதும் தீமையும், சில விரல்களை பயன்படுத்தும்போது அதீத நன்மைகளும் ஏற்படும்.
கட்டை விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் தீராத வியாதி வரும். ஆள் காட்டி விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் பொருட்கள் நாசம். நடுவிரலால் விபூதியை தொட்டு இட்டுக்கொண்டால் நிம்மதியின்மை. மோதிர விரலால் விபூதியை தொட்டுக்கொண்டு அணிந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். சுண்டு விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் கிரகதோஷம் ஏற்படும்.
மோதிர விரலாலும், கட்டை விரலாலும் சேர்த்து விபூதியை எடுத்து மோதிர விரலால் விபூதியை இட்டுக் கொண்டால் உலகமே வசப்படும். எடுக்கும் முயற்சி வெற்றி பெறும்.