Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

அக்னி நட்சத்திர காலத்தில் சுபகாரியங்களை தவிர்ப்பது ஏன்...?

Agni star
, புதன், 4 மே 2022 (09:02 IST)
அக்னி நட்சத்திர தோஷம் ஜோதிட சாஸ்திரத்தில் இது அக்னி நட்சத்திர தோஷம் என்று அழைக்கப்படுகிறது.


அக்னி நட்சத்திர காலத்தில் எந்த ஒரு சுபகாரியங்களும் நிகழ்த்தப்பட மாட்டாது. புதிய பேச்சுவார்த்தைகள் எதுவும் இக்காலகட்டத்தில் துவங்கப்படாது.

தமிழர்களின் புத்தாண்டு சூரியனை அடிப்படையாகக் கொண்டது. சூரியபகவான் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் மாதமே புத்தாண்டின் தொடக்கம். அதனால்தான் சித்திரை நட்சத்திரத்துக்கு மேஷ மாதம் என்று கூடப் பெயர்.

மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். நவகிரகங்களில் செவ்வாய் பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியின் தன்மையைப் பெற்றது. சூரிய பகவானும் நெருப்பு வடிவானவர் என்பதால் அவர் மேஷ ராசியில் சஞ்சரிக்கும்போது உச்சம் பெறுகிறார். உச்சம் என்றால் பலம் கூடி இருத்தல் என்று பொருள்.

சூரியனின் பலம் கூடி வெப்பம் அதிகமாக வெளிப்படும் காலமாக இந்த மாதம் அமைகிறது. அதிலும் பரணி நட்சத்திரத்திலும் கிருத்திகை நட்சத்திரத்திலும் ரோகிணி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம்வரையிலும் சூரிய பகவான் சஞ்சரிக்கும் காலமே அக்னி நட்சத்திர காலமாகும்.

இதில் பரணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலத்தை முன் கத்தரி என்றும் ரோகிணி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம்வரை சஞ்சரிக்கும் காலத்தைப் பின்கத்தரி என்றும் சொல்கிறோம். நடுவில் இருக்கும் கிருத்திகை நட்சத்திர காலமே கத்தரி வெயிலின் மிக அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும் நாள்களாகும். இந்த ஆண்டு மே 4-ம் தேதி தொடங்கி மே 28-ம் தேதிவரை அக்னி நட்சத்திர தினங்களாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சதுர்த்தியில் விரதம் இருந்தால் என்ன கிடைக்கும்?