ஆஸிக் கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவின் தம்பி அர்சகான் கவாஜா தனது நண்பரை வேண்டுமென்றே தீவிரவாதத் தாக்குதலில் சிக்கவைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் போட்டிகளின் தொடக்க ஆட்டக்காரராக உஸ்மான் கவாஜா விளையாடி வருகிறார். அவரது பூர்வீகம் பாகிஸ்தானாகும். தனது குடும்பத்தோடு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறார். இவருக்கு அர்சகான் கவாஜா என்ற ஒரு தம்பி இருக்கிறார். அங்குள்ள பல்கலைக் கழகத்தில் படித்து வருகிறார்.
அர்சகான் கவாஜா படிக்கும் பல்கலைக்கழகத்தில் இலங்கையைச் சேர்ந்த முகமது கமீர் நிஜாமுதீன் என்பவரும் படித்து வருகிறார். இவர்கள் இருவரும் நண்பர்களாகப் பழகி வந்தனர். பல்கலையில் படிக்கும் ஒரு பெண்ணை காதலிப்பதில் நிஜாமுதீனுக்கும், அர்சகான் கவாஜாவுக்கும் இடையே போட்டி எழுந்துள்ளது.
இதனால் நிஜாமுதீன் மீது ஆத்திரம் அடைந்த அர்சகான் கவாஜா ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல்லை கொலை செய்ய நிஜாதிமுதீன் திட்டமிட்டுள்ளதாக போலீஸிக்கு தகவல் அளித்தார். அது தொடர்பாக நிஜாமுதீனின் டைரியிலும் கொலைத்திட்டத்டஹிப் பற்றி எழுதிவைத்துள்ளார். இதனால் நிஜாமுதீன் கைது செய்யப்பட்டு போலிஸாரால் விசாரிக்கப்பட்டார். விசாரணையில் தன் மீதான குற்ற்ச்சாட்டை மறுத்தார் நிஜாமுதீன்.
எனவே போலிஸார் நிஜாமுதீனுக்குக் கையெழுத்து சோதனை நடத்தினர். சோதனையில் டைரியில் இருப்பது நிஜாமுதீனின் கையெழுத்து இல்லை என்ற உண்மை வெளிப்பட்டது. அதனால் அவரை விடுதலை செய்தனர். வழக்குக் குறித்து மேலும் விசாரனையில் இறங்கிய போலிஸார் முன்பகையால் கவாஜாதான் இந்த சதித்திட்டத்தை தீட்டி செயல்படுத்தி இருக்கிறார் என்ற உணமையைக் கண்டறிந்தனர். அதனையடுத்து இன்று அர்சகான் கவாஜா போலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள ஆஸ்ஹிரேலியா போலிஸார் நிஜாமுதினிடம் மன்னிப்புக் கேட்டுள்ளனர்.