இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது கட்டாக் நகரில் நடைபெற்று வருகிறது
இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தது. இதனையடுத்து லீவிஸ் மற்றும் ஹோப் களமிறங்கி நிதானமான ஆட்டத்தை கொடுத்தனர். இருவரும் தலா 50 பந்துகளில் 21 மற்றும் 41 ரன்களை எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இதன் பின்னர் களமிறங்கிய சேஸ் மற்றும் ஹெட்மயர் ஓரளவு நிதானமாக ஆடிய போதிலும் அதனை அடுத்து அதிரடியாக விளையாடிய பூரன், 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் 89 ரன் எடுத்தார். இவரையடுத்து பொல்லார்டும் அதிரடியாக விளையாடியதால் மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்கள் எடுத்துள்ளது
முதலில் நிதானமாகவும் பின்னர் அதிரடியாகவும் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி கொடுத்துள்ள 315 ரன்கள் என்ற இமாலய இலக்கை இந்திய அணி எட்டுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்திய அணியை பொறுத்தவரையில் ரோகித் சர்மா, கேஎல் ராகுல், விராத் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், கேதார் ஜாதவ், ஜடேஜா ஆகிய 7 பேட்ஸ்மேன்கள் ஃபார்மில் உள்ளதால் இந்த இலக்கை எளிதில் எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது