99 வயதான தாத்தா ஒருவர் நீச்சல் போட்டியில் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். இதனால் தற்போது அனைவரின் கவனமும் இந்த தாத்தாவின் மீதுதான் உள்ளது.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் பிப்ரவரி 28 ஆம் தேதி நடைபெற்ற காமன்வெல்த் நீச்சல் போட்டிக்கான தகுதிப் போட்டி நடைபெற்றது.
இதில் 100 முதல் 104 வயது வரை உள்ளவர்களுக்கான பிரிவில் ஆஸ்திரேலியாவை ஜார்ஜ் கோரோன்ஸ் கலந்துகொண்டார். இவருக்கு 99 வயதாகிறது.
ஜார்ஜ் 50 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் நீச்சலில் வெறும் 56.12 விநாடிகளில் கடந்து உலக சாதனை படைத்து அசத்தியுள்ளார். 2014 ஆம் ஆண்டு இதே பிரிவில் கனடா நீச்சல் வீரர் 50 மீட்டர் தூரத்தை 1 நிமிடம் 31 விநாடிகளில் கடந்தது இதுவரை உஅலக சாதனையாக இருந்தது.
இதனை தற்போது ஜார்ஜ் முறியடித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நான் சிறிய வயதில் இருந்தே நீச்சல் பயிற்சி எடுக்கவில்லை. 80 வயதில்தான் நீச்சலில் ஆர்வம் வந்தது. கற்றுக்கொள்ள வயது தடையில்லையே என கேட்கிறார்.