Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

பதிலடி கொடுத்த இந்திய பவுலர்கள் – 108 ரன்களில் ஆஸி ஆல் அவுட்!

பதிலடி கொடுத்த இந்திய பவுலர்கள் – 108 ரன்களில் ஆஸி ஆல் அவுட்!
, சனி, 12 டிசம்பர் 2020 (08:02 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டத்தில் ஆஸி ஏ 108 ரன்களுக்கு சுருண்டுள்ளது.

இந்திய ஆஸ்திரேலியாவுக்கு 3 மாத சுற்றுப் பயணமாக நவம்பர் மாதம் சென்றது. அங்கு ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி 20 தொடர்கள் நடந்து முடிந்துள்ளன. அதில் ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவும், டி 20 தொடரில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. இன்னும் டெஸ்ட் தொடர் மற்றுமே உள்ளது.

இதையடுத்து இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகள் மோதும் பகலிரவு 3 நாள் பயிற்சி ஆட்டம் தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரஹானே முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். களமிறங்கிய இந்திய அணி வீரரகள் ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடினாலும் பின்னர் வந்த வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்திய அணி மோசமான ஸ்கோரை நோக்கி சென்றது.

இந்நிலையில் களமிறங்கிய பூம்ரா சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அதுமட்டுமில்லாமல் இந்தியாவிலேயே அதிக ரன்கள் அடித்த வீரராகவும் ஆனார். இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 189 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இதையடுத்து இந்திய பந்துவீச்சாளர்களும் அனல் பறக்க பந்து வீசினர். இந்திய தாக்குதலில் நிலைகுலைந்த ஆஸீ பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் அந்த அணி 108 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 81 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடுக்கடலில் சச்சின் செய்த சாசகம்... இணையதளத்தில் வைரலாகும் வீடியோ