ஆஸ்திரேலியா இந்தியா இடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போடியின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் ரன்னுக்கு விக்கெட் இழந்துள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (டிசம்பர் 14 ) பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியக் கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆரோன் பிஞ்ச் மற்றும் ஹாரிஸ் ஆஸ்திரேலியாவுக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். அரைசதம் அடித்த இருவரும் முதல் விக்கெட்டிற்கு 112 ரன்களை சேர்த்தனர். இவர்களின் பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் தடுமாறினர். 50 ரன்கள் எடுத்த நிலையில் பிஞ்ச் பூம்ரா பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அதையடுத்து களமிறங்கிய கவாஜாவை 5 ரன்களில் உமேஷ் யாதவ் வெளியேற்றினார். சிறப்பாக விளையாடிய ஹாரிஸ் 70 ரன்கள் சேர்த்திருந்த போது ஹனுமா விஹாரி பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதையடுத்து வந்த ஹான்ஸ்கோம்ப் 7 ரன்களில் வெளியேற. ஷான் மார்ஷோடு ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட் ரன் குவிப்பில் ஈடுபட்டார். ஷான் மார்ஷ் 42 ரன்களிலும் ஹெட் 52 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர்.
முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் சேர்த்துள்ளது. கேப்டன் டிம் பெய்ன்னும்(16) பேட் கம்மின்ஸும் (11) களத்தில் விளையாடி வருகின்றனர். இந்தியா தரப்பில் இஷாந்த் ஷர்மா, ஹனுமா விஹாரி தலா 2 விக்கெட்டுகளும், பூம்ரா, யாதவ் தலா 1 விகெட்டும் கைப்பற்றியுள்ளனர்.