Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

Prasanth Karthick

, ஞாயிறு, 22 செப்டம்பர் 2024 (14:30 IST)

இந்தியா - வங்கதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டி முடிவடைந்துள்ள நிலையில் அஸ்வினின் அசுரத்தனமான ஆட்டம் ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது.

 

 

இந்தியா - வங்கதேசம் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியுள்ளது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்தியாவின் முன்னனி பேட்ஸ்மேன்கள் எதிர்பாராத விதமாக விக்கெட்டை இழந்து இந்திய அணி தடுமாறியபோது பேட்டிங்கில் இறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் அபாரமாக ஆடி சதம் வீழ்த்தி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

 

அதுபோல இரண்டாவது இன்னிங்ஸில் ஒரே ஆளாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தி வங்கதேச அணியை நிலைகுலைய செய்தார். இவ்வாறாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அஸ்வின் பல சாதனைகளை படைத்துள்ளார். 
 

 

அப்படியாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் என 37 போட்டிகளில் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதிகமுறை 10 விக்கெட்டுகள் வீழ்த்திய (8 முறை) வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

 

இந்தியாவுக்காக அதிகமான விக்கெட்டுகளை (522 விக்கெட்கள்) வீழ்த்திய இரண்டாவது வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்.

 

இரண்டாவது இன்னிங்ஸின் இரண்டாவது பாதியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய (99 விக்கெட்டுகள்) இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்.

 

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 30க்கும் மேற்பட்ட முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, 20 முறைக்கும் மேல் அரைசதம் அடித்த ஒரே கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!