நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதிய நிலையில் பத்திரனா அபார பந்துவீச்சு காரணமாக மும்பை அணி தோல்வி அடைந்தது.
நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்தது. கேப்டன் ருத்ராஜ் 69 ரன்கள், சிவம் துபே அதிரடியாக 38 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தனர். கடைசி நேரத்தில் வந்த தல தோனி நான்கு பந்துகளில் 20 ரன்கள் எடுத்து அபாரமாக அதிரடி காட்டினார்
இதனை அடுத்து 207 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மும்பை அணி விளையாடிய நிலையில் ரோகித் சர்மா சதம் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆனால் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க ஒரு பேட்ஸ்மேன் கூட இல்லை என்பதால் அந்த அணி 20 ஓவர்கள் 186 ரன்கள் மட்டுமே எடுத்ததால் சிஎஸ்கே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது
நேற்றைய போட்டியில் மதிஷா பத்திரனா அபாரமாக பந்துவீசி 28 ரன்கள் மட்டுமே கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை அடுத்து அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
நேற்றைய வெற்றியின் காரணமாக சிஎஸ்கே அணி 8 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் இரண்டு இடத்தில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் உள்ளன.