யுஎஸ் ஓபன் டென்னிஸ்: உலகின் நம்பர் 1 வீரர் ஜோகோவிச் தகுதிநீக்கம்!
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரில் உலகின் நம்பர் 1 வீரர் ஜோகோவிச் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 4வது சுற்றில் விளையாடிய நோவக் ஜோகோவிச் பாப்லோ கரேனோ பஸ்டாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் செட்டின் போது சர்வ் ஒன்றைத் தோற்றதால் 5-6 என பின் தங்கியிருந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த ஜோகோவிச் பந்தை மட்டையால் கொஞ்சம் வேகமாகவே பின் பக்கமாக வெறுப்பில் அடித்தார். அந்த பந்து அங்கு நின்று கொண்டிருந்த பெண் லைன் நடுவரின் தொண்டையைத் தாக்கியதால் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார்
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜோகோவிச் உடனே பெண் நடுவருக்கு உதவி செய்து அவரிடம் மன்னிப்பும் கோரினார். இதனையடுத்து யுஎஸ் ஓபன் தொடர் நடுவர் ஆரிலி டூர்ட்டி இதுகுறித்து ஆலோசனை செய்து ஜோகோவிச் தகுதிநீக்கம் செய்யப்படுவதாக அறிவித்தார்.
நோவக் ஜோகோவிச் தான் வேண்டுமென்றே அவ்வாறு செய்யவில்லை என்றும், தெரியாமல்தான் நடந்து விட்டதாகவும், அதற்காக மன்னிப்பு கேட்டுவிட்டதாகவும் கூறியும் கிராண்ட் ஸ்லாம் விதிப்படி நோவக் ஜோகோவிச் செய்யப்படுவதாக நடுவர் உறுதியாக அறிவித்ததால் சோகத்துடன் ஜோகோவிச் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.