கொரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு முதன் முதலாக நடக்க இருக்கும் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி வீரர்கள் நிறவெறிக்கு எதிராக பட்டை அணிந்து விளையாட இருக்கின்றனர்.
கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து எந்தவொரு சர்வதேசக் கிரிக்கெட் போட்டியும் நடக்கவில்லை. இதனால் கிரிக்கெட் வாரியங்கள், ஒளிபரப்பு உரிமையை வாங்கிய தொலைக்காட்சிகள் ஆகியவற்றுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லாமல் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி முதல் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில், இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இம்மாதம் 8 ஆம் தேதி தொடங்க இருக்கிறது.
இந்நிலையில் அமெரிக்க கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் நிறவெறி காரணமாக கொல்லப்பட்டதை அடுத்து கிரிக்கெட்டிலும் அதுபற்றி விவாதங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் நிறவெறிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் BLACK LIVES MATTER என்ற வாசகத்தோடு இங்கிலாந்து அணி வீரர்கள் களம் இறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.