நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே ஹாமில்டனில் நடைபெற்று வரும் இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டிராவில் நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது
நவம்பர் 29ஆம் தேதி ஆரம்பமான இந்த கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதலாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 375 ரன்கள் குவித்தது. லாதம் சதமடித்தார். மிச்செல், டெய்லர், வாட்லிங் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.
இந்த நிலையில் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 476 ரன்கள் குவித்தது. கேப்டன் ரூட் 226 ரன்களும் பர்ன்ஸ் 101 ரன்களும் போப் 75 ரன்களும் எடுத்தனர். இதனால் இங்கிலாந்து அணி 101 ரன்கள்முன்னணியில் இருந்தது
இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்த நிலையில் நான்காம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. நாளை ஒருநாள் மட்டுமே இருக்கும் நிலையில் இந்த டெஸ்ட் கிட்டத்தட்ட டிராவை நோக்கி சென்று விட்டதாகவே கிரிக்கெட் வர்ணனையாளர் கருத்து தெரிவித்து வருகின்றனர்
முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது