இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆட்டக்காரரும், தற்போதைய பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் ஐபிஎல் தொடர் பற்றி பேசியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் டி20 போட்டிகள் அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக ஐபிஎல் அணிகள் ஏற்கனவே அரபு அமீரகம் சென்றடைந்துள்ளன. அங்கு வீரர்கள் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க, வீரர்கள் அனைவரும் 6 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக இந்த முறை ஐபிஎல் தொடர் முழுவதும் ஆளில்லாத காலியான மைதானத்தில் நடக்க உள்ளன.
இன்னும் ஒரு வாரகாலமே உள்ள நிலையில் தற்போது வரை 13 பேருக்கு கொரோனா உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள கவுதம் கம்பீர் ‘வீரர்கள் கொரோனாவைப் பார்த்து அஞ்சுவார்கள் என நான் நினைக்கவில்லை. அவர்கள் பயோ-செக்யூர் குமிழிக்குள் இருப்பது அவசியம். ஒரே ஒரு வீரருக்காக ஐபிஎல் லை நிறுத்த முடியாது’ எனக் கூறியுள்ளார்.