பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட செல்லும் வீரர்களுக்கு ஜனாதிபதிக்கு நிகரான பாதுகாப்புக் கிடைக்கும் என மேற்கிந்திய தீவுகள் வீரர் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.
யூனிவர்ஸல் பாஸ் கிறிஸ் கெய்ல் தற்போது உலகம் முழுவது நடக்கும் டி 20 தொடர்களில் பங்கேற்று வருகிறர். சமீபத்தில் பாகிஸ்தான் பிரிமியர் தொடரில் விளையாடிவிட்டு தற்போது வங்கதேச பிரிமியர் தொடரில் விளையாண்டு வருகிறார்.
இதையடுத்து நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாகிஸ்தானில் வீரர்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியபோது ‘இன்றைய தேதிக்கு உலகளவில் பாகிஸ்தான் மிகவும் பாதுகாப்பான நாடுதான்.அங்கே வீரர்களுக்கு ஜனாதிபதிக்கு நிகரான பாதுகாப்பு கிடைக்கும். அதுபோல வங்கதேசத்திலும் நல்ல பாதுகாப்பு அளிக்கின்றனர். இங்கே நான் பாதுகாப்பாகதானே இருக்கிறேன்.’ எனக் கூறினார்.
சமீபகாலமாக தேசிய அணியில் விளையாடாமல் லீக் மற்றும் பிக்பாஷ் போன்ற 20-20 போட்டிகளில் அதிக கவனம் செலுத்தி வரும் கெய்ல் 45 வரை தான் கிரிக்கெட் விளையாடுவேன் என அறிவித்துள்ளார். இந்த ஆண்டு வரவுள்ள டி 20 உலகக்கோப்பை போட்டியில் அவர் மேற்கிந்திய தீவுகள் அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.