கிரிக்கெட் போட்டிகளில் முடிவுகளை முடிவு செய்யும் மேட்ச் பிக்சிங் விவகாரம் அவ்வப்போது நடைபெற்று வரும் நிலையில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக இரண்டு கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்நாள் தடையும் ஒரு வீரருக்கு ஐந்து வருட தடையும் செய்யப்பட்டுள்ளது
கடந்த 2014ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி போட்டி நடைபெற்றபோது ஹாங்காங் அணி, கனடா மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுடன் மோதியபோது ஹாங்காங் அணியின் அஹ்மத், நடீம் அஹ்மது மற்றும் ஹாசிப் அம்ஜத் ஆகியோர் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது
இதனையடுத்து இதுகுறித்த விசாரணை கடந்த ஐந்து வருடங்களாக நடைபெற்ற நிலையில் தற்போது மூவரும் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஐசிசி அதிரடியாக அஹ்மத், நடீம் அஹ்மது ஆகிய இருவருக்கும் வாழ்நாள் தடையும் ஹாசிப் அம்ஜதுக்கு ஐந்து வருட தடையும் விதித்துள்ளது. இந்த விவகாரம் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது