ஆசிய கோப்பை: கடைசி ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி!
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று உலகமே எதிர்பார்த்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெற்றது என்பதும் இதில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது.
இந்தியாவின் புவனேஷ் குமார் மிக அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனை அடுத்து 148 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி பேட்டிங் செய்த நிலையில் 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது.
விராட் கோலி மற்றும் ஜடேஜா தலா 35 ரன்கள் எடுத்தனர் என்பதும், கடைசி நேரத்தில் அதிரடியாக ஹர்திக் பாண்டியா விளையாடி 33 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.