இந்தியா மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூர் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் இந்தியா அபாரமான வெற்றி பெற்றுள்ளது, இதனை அடுத்து அந்த அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
கான்பூரில் செப்டம்பர் 27ஆம் தேதி தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில், வங்காளதேச அணி முதல் இன்னிங்ஸில் 233 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 146 ரன்களும் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 285 ரன்கள் எடுத்தது. வெற்றிக்கான இலக்காக 95 ரன்களை தேர்வு செய்து, இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்தது, இதனால் அபாரமான வெற்றியடைந்தது.
இந்த போட்டியின் முதல் நாள் மழையால் பாதிக்கப்பட்டது. இரண்டாவது மற்றும் மூன்றாவது நாள் மழையால் முழுவதும் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் நான்காவது மற்றும் ஐந்தாவது நாள் மட்டுமே ஆட்டம் நடந்தது. ஐந்தாவது நாளில் சில மணி நேரத்திற்குள் போட்டி முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.