மூன்றாவது ஒருநாள் போட்டியில் 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்திலே 4 விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொன்உ விளையாடி வரும் இந்திய அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது.
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்து வரும் இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிறகு 217 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகள் சாய்தார். திருமண்ணே அதிகபட்சமாக 80 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய 16 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்கள் குவித்து தடுமாறி வருகிறது. தவான் 5 ரன்களில் வெளியேற அவரை அடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 3 ரன்களில் வெளியேறினார். தற்போது ரோகித் மற்றும் தோனி விளையாடி வருகின்றனர். ரோகித் 35 ரன்களுடன் களத்தில் உள்ளார்.