இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் உலகக்கோப்பை டி 20 தொடர் நடக உள்ளது.
ஆண்டுதோறும் நடைபெற்று வரும் உலகக்கோப்பை டி20 போட்டிகள் கிரிக்கெட் ரசிகர்களுக்கு முக்கியமான ஒரு நிகழ்வாகும். குறிப்பாக இந்தியா – பாகிஸ்தான் அணிகள் கடந்த பல ஆண்டுகளாக உலகக்கோப்பை போட்டிகளில் மட்டுமே ஒன்றை ஒன்று எதிர்கொள்வதால் இந்த போட்டிகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை டி20 போட்டிக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 23ல் நடக்கும் டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. குரூப் 2வில் உள்ள இந்திய அணி தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்வதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய ஐந்து நிமிடத்திலேயே அனைத்து டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்துவிட்டதாம். அரசியல் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே விளையாடுவதால் அந்த போட்டிக்கு கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆர்வத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.