முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி அதிரடியாய் விளையாடி தென் ஆப்பிரிக்காவுக்கு அணிக்கு 200 ரன்கள் இலக்கு வைத்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இன்று முதலாவது டி20 போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பவுலிங் செய்ய முடிவு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதல் அதிரடியாய் விளையாடியது. சரவெடியாய் வெடித்த தவான் 39 பந்துகளுக்கு 72 ரன்கள் குவித்தார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது.
இதன்மூலம் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டி20 போட்டி அரங்கில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. ஆரம்பத்தில் பவுன்சர் பால் போட்டு இந்திய வீரர்களுக்கு சிரமம் கொடுத்த தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் இறுதியில் ஷார்ட் பால் போட்டு டஃப் கொடுத்தனர்.
ஷிகர் தவான் கடைசி வரை களத்தில் இருந்தால் அணியின் ஸ்கோர் மேலும் கூடியிருக்க வாய்ப்புள்ளது.