இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் கடந்த 22ஆம் தேதி ஆரம்பித்த நிலையில், மூன்றே நாள்களில் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்த இந்திய பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனை அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்து 9 விக்கெட்டுகளை இழந்து 347 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. கேப்டன் விராட் கோஹ்லி அபாரமாக விளையாடி சதம் அடித்தார்
இதனை அடுத்து 241 ஒரு ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணி 195 ரன்களுக்கு ஆட்டமிழந்ததையடுத்து இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்சில் வங்கதேச அணியின் முசாபிர் ரஹிம் அபாரமாக விளையாடி 74 ரன்கள் அடித்த போதிலும் மற்ற பேட்ஸ்மென்கள் கை கொடுக்காததால் வங்கதேச அணி படுதோல்வி அடைந்தது
அதேபோல் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்களையும் வீழ்த்திய இஷாந்த் ஷர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது