ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியுற்று வெள்ளிப்பதக்கத்தை பெற்று சாதனை படைத்தார்.
இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின், பெண்களுக்கான ஒற்றையர் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில், இந்திய வீராங்கனை பி.வி சிந்து, சீன வீராங்கனை தாய் டிசுயிங்கை எதிர்கொண்டார். இவர் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவாலை தோற்கடித்தவர் ஆவார்.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வந்தார் தாய் டிசுயிங். சிந்து கடுமையாக முயற்சி செய்த போதிலும், தாய் டிசுயிங் 21-13 21–16 என்ற நேர் செட் கணக்கில் சிந்துவை தோற்கடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். சிந்துவிற்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
வெள்ளிப்பதக்கம் வென்ற சிந்துவிற்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.