இந்த ஐபிஎல் போட்டியில் குஜராத் அணி இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்து கடைசி இடத்தில் பரிதாபமாக இருந்த நிலையில் நேற்று கொல்கத்தா அணியுடன் ஈடன் கார்டன் மைதானத்தில் மோதியது.
ஆடியன்ஸ் ஆதரவுடன் அதிரடியாக முதலில் களம் இறங்கிய கொல்கத்தா முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. உத்தப்பா 72 ரன்கள் எடுத்தார்.
இந்த நிலையில் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி, 18.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 188 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுக்கள் வித்தியாசட்தில் வெற்றி பெற்றது,. சுரேஷ் ரெய்னா 46 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை பெற்றார். இந்த வெற்றியின் மூலம் குஜராத் ஆறு புள்ளிகள் எடுத்து ஒரு இடம் முன்னேறியுள்ளது.