பிசிசிஐ நடத்தும் 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் இந்த ஆண்டுடன் 10 ஆண்டுகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது. இந்நிலையில், இந்த சீசன் ஐபிஎல் போட்டி மீது அதிக எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 11 ஐபிஎல் போட்டி ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது.
இந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் போட்டியில் இடம் பெறயுள்ளன. போட்டிக்கான வீரர்கள் ஏலம் வருகிற 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் பெங்களூரில் நடைபெறவுள்ளது.
ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை தக்க வைத்துகொள்ளலாம். 3 வீரர்களை நேரடியாகவும், 2 வீரர்களை மேட்ச் கார்ட் சலுகையை பயன்படுத்தி தக்க வைத்துகொள்ள இயலும். தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை 4 ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.
இந்நிலையில், குறிப்பிட்ட அணிகளில் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது, அவை...
சென்னை சூப்பர் கிங்ஸ்: தோனி, ரெய்னா, ஜடேஜா மற்றும் மேட்ச் கார்ட் வீரர் - பிராவோ
டெல்லி டேர்டெலில்ஸ்: ரிசப்பண்ட், ஷிரோ யாஸ் அய்யர்
மும்பை இந்தியன்ஸ்: ரோகித் சர்மா, ஹார்த்திக் பாண்டியா, குனால் பாண்டியா
சன் ரைசஸ் ஐதராபாத்: வார்னர், தீபக்ஹீடா
இந்த வீரர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் விரைவில் வெளியாகும். அதே போல், ஒவ்வொரு அணியும் இந்த முறை வீரர்களின் ஏலத்துக்கு ரூ.80 கோடி வரை செலவிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.