13 நாட்கள் ஆகியும் இன்னும் எங்கள் லக்கேஜ்கள் வரவில்லை என அயர்லாந்து நாட்டு வீராங்கனை ஒருவர் ஐசிசி மீது புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சமீபத்தில் அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி ஓமன் நாட்டில் நடந்த கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இந்த போட்டி முடிவடைந்து அயர்லாந்துக்கு வீராங்கனைகள் திரும்பிய நிலையில் இரண்டு வாரமாகியும் அவர்களுடைய லக்கேஜ்கள் இன்னும் ஓமன் நாட்டிலேயே இருப்பதாக தெரியவந்து உள்ளது
இதனை அடுத்து எங்கள் லக்கேஜ்கள் குறித்து ஏதாவது அப்டேட் உண்டா ஐசிசி? என அயர்லாந்து வீராங்கனை ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். 13 நாட்கள் கடந்தும் அவை இன்னும் ஓமன் நாட்டில் இருக்கின்றன என்றும் இதில் மோசமானது என்னவென்றால் எனது கல்லூரி நோட்ஸ்கள் அதில் தான் இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்
இதனை அடுத்து ஐசிசி நிர்வாகம், அயர்லாந்து நாட்டின் வீராங்கனைகளின் லக்கேஜ்களை உடனடியாக அனுப்ப ஏற்பாடு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன