தென் ஆப்பிரிக்காவில் நடக்க உள்ள ஒருநாள் தொடரில் இருந்து கோலி விளையாட உள்ளதாக தகவல் வெளியாகிறது.
இந்திய லிமிடெட் ஓவர் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரோஹித் ஷர்மா தென் ஆப்பிரிக்கா தொடரில் இருந்து முழு நேர கேப்டனாக செயல்பட உள்ளார். இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான அணியில் இருந்து அவர் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இப்போது டெஸ்ட் தொடருக்கு பின்னர் தொடங்கும் ஒருநாள் தொடரில் இருந்து கோலி விலக முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. தனது குழந்தை வாமிகாவின் முதல் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக அவர் இந்த தொடரில் இருந்து விலக உள்ளதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், தற்போது ஒரு முக்கிய தகவல் வெளியாகிவருகிறது. அதில், தென்னாப்பிரிக்காவுக்கு வரும் 17 ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள இந்திய அணி அங்கு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதில் டெஸ்ட் தொடருக்கு கோலி கேப்டனாகத் தொடர்கிறார். ஒருநாள் ஒருநாள் தொடருக்கு ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எனவே இந்திய வீரர்கள் பயோ –பபுள் கட்டுப்பாடு இருப்பதால் வீரர்கள் தங்கள் குடும்பத்தாருடன் தென்னாப்பிரிக்க செல்லவுள்ளனர். விராட் கோலியும் அங்கு செல்லவுள்ளார் எனவும் டெஸ்ட் தொடருக்குப் பின்னர் அங்கு பயோ- பபுள் அழுத்தம் இருப்பதாக உணர்ந்தால் கோலி விலகுவார் எனவும் ஒரு பிசிசிஐ அதிகாரி தெரிவித்துள்ளார்.