Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒலிம்பிக்ஸா இது..? அடி தாங்க முடியாமல் வெளியேறிய பெண் பாக்ஸர்! அடித்த நபர் ஆணா? வெடித்த சர்ச்சை!

Paris Olympics

Prasanth Karthick

, வெள்ளி, 2 ஆகஸ்ட் 2024 (11:21 IST)

பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் பெண்ணாக மாறிய ஆண் வீரர் மூர்க்கமாக தாக்கியதால் கடுப்பான சக பெண் பாக்ஸர் பாதியிலேயே போட்டியை விட்டு வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பல்வேறு போட்டிகளில் பல நாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர். இதில் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் இத்தாலியை சேர்ந்த பெண் வீராங்கனை ஏஞ்சலா கரினி அல்ஜீரியாவை சேர்ந்த இமானெ கலீப்புடன் மோதினார்.

 

இந்த இமானே கலீப் முன்னர் ஆணாக இருந்தவர், பின்னர் அறுவை சிகிச்சை செய்து தன்னை பெண்ணாக மாற்றிக் கொண்டவர். போட்டி தொடங்கியதுமே கலீப் மூர்க்கமாக ஏஞ்சலாவை தாக்கியதில் அவர் காயமடைந்து மூக்கில் ரத்தம் வந்தது. போட்டி தொடங்கி 46வது வினாடியிலேயே போட்டியை நிறுத்திய ஏஞ்சலா, இமானேவிடம் கைகொடுத்துவிட்டு போட்டி வளையத்தை விட்டு அழுதுக் கொண்டே வெளியேறினார். மேலும் ‘இது நியாயமே இல்லை’ என்றும் அவர் கூறினார்.

 

ஆனால் இந்த போட்டியில் இமானே கலீப் வெற்றி பெற்றதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. இதற்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தொழிலதிபர் எலான் மஸ்க் உள்ளிட்ட பலர் விமர்சனங்களை வைத்துள்ளனர். ஆணாக இருந்து பெண்ணாக மாறியதாக சொல்லும் நபர் ஒருவரை எப்படி பெண்களுக்கான குத்துச்சண்டையில் பங்கேற்க அனுமதிக்கலாம் என கேள்விகளை பலரும் எழுப்ப தொடங்கியுள்ளனர்.

 

இந்த இமானே கலீப் முன்னதாக இந்தியாவில் நடந்த உலக பெண்கள் பாக்ஸிங் சாம்பியன்ஷிப்பில் கலந்து கொள்ள முயன்றபோது அவருக்கு நடத்தப்பட்ட மரபணு சோதனையில் அவர் பெண் என நிரூபணமாகவில்லை என விளையாட அனுமதி மறுக்கப்பட்டார் என்பதும், பின்னர் டோக்கியா ஒலிம்பிக்ஸில் அவர் தகுதி பெற்று விளையாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹாட்ரிக் பதக்கம் மிஸ்ஸிங்.. பி.வி.சிந்து ஒலிம்பிக்ஸில் இருந்து வெளியேற்றம்! - ரசிகர்கள் அதிர்ச்சி!