ஐ.எஸ்.எல். கால்பந்து: அரையிறுதி வரை முன்னேறிய சென்னை அணி
கடந்த சில மாதங்களாக ஐஎஸ்எல் கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே சென்னையின் எப்சி அணி படு மோசமாக விளையாடி வந்தது. முதல் 6 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்று 3 தோல்விகள் மற்றும் இரண்டு டிரா என சென்னை அணி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இதனால் சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் முதல் சில வாரங்கள் கடைசி இடத்தில் தான் இருந்தது என்பது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னை அணியின் பயிற்சியாளர் எடுத்த அதிரடி நடவடிக்கையை எடுத்து வீரர்கள் மாற்றப்பட்டு அதன் பின்னர் வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கியது. தற்போது சென்னை அணி 8 வெற்றிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. இதனால் அந்த அணி அரையிறுதிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் வரும் 29ம் தேதி சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் கோவா அணியுடன் அரையிறுதிப் போட்டியில் சென்னை அணி விளையாடவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் சென்னை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பது மட்டுமன்றி என்எப்சி சாம்பியன் லீக் போட்டிக்கு நேரடியாக நேரடியாக தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை வீரர்கள் இந்த சாதனையை நிகழ்த்துவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அதேபோல் மீண்டும் சென்னை அணி சாம்பியன் பட்டம் பெறவேண்டும் என்ற சென்னை அணியை ரசிகர்களின் கனவு இந்த ஆண்டு நிறைவேற அதிக வாய்ப்பு இருப்பதாக கால்பந்து விளையாட்டு வர்ணனையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்