இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வினை இங்கிலாந்து வீரர் பாராட்டியுள்ளார்.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளது. விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைக்கும் என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 88 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன் எடுத்தது. அஸ்வின் 4 விக்கெட்டும், முகமது சமி 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இங்கிலாந்து ஸ்டேடியத்தில் பவுலர்களுக்கு எப்பொழுதும் ஃபாஸ்ட் பவுலிங் தான் சாதகமாக இருக்கும், ஆனால் நேற்று ஸ்பின் பவுலரான அஸ்வின் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய இங்கிலாந்து தொடக்க வீரர் ஜென்னிங்ஸ், நேற்றைய ஆட்டத்தில் அஸ்வின் மிகவும் டஃப் கொடுத்தார். அவரது பவுலிங் பிரம்மிக்க வைக்கும் விதமாக இருந்தது. அஸ்வின் ஒரு மிகச்சிறந்த வீரர் என அஸ்வினை புகழ்ந்து பேசினார் ஜென்னிங்ஸ்.