Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

களத்தில் இறங்கி கொரோனாவுக்கு எதிராகப் போராடும் முன்னாள் இந்திய வீரர்! யார் தெரிகிறதா ?

களத்தில் இறங்கி கொரோனாவுக்கு எதிராகப் போராடும் முன்னாள் இந்திய வீரர்! யார் தெரிகிறதா ?
, திங்கள், 30 மார்ச் 2020 (08:20 IST)
இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஜோஹிந்தர் ஷர்மா ஹரியானா மாநிலத்தில் கொரோனாவுக்கு எதிராகக் களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி கடைசி ஓவர் வீசி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஜோஹிந்தர் ஷர்மா. அதன் பின் சில ஆண்டுகள் அவர் இந்திய அணிக்காக விளையாடி பின்னர் ஓய்வு பெற்றார்.

அதன் பின் ஹரியானா மாநிலக் காவல்துறையில் டி எஸ் பியாக வேலை செய்துவரும் அவர் இப்போது கொரொனாவுக்கு எதிரான களப்பணியில் இறங்கி வேலை செய்துவருகிறார். இது சம்மந்தமாக அவரதுப் புகைப்படத்தைப் பகிர்ந்த ஐசிசி ‘2007 ஆம் ஆண்டு உலகக்கோப்பை ஹீரோ… 2020 ஆம் நிஜ ஹீரோ… ‘ என அவருக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய ஜோஹிந்தர் சர்மா ‘நான் 13 ஆண்டுகளாக டி எஸ் பியாக இருந்து வருகிறேன். நாடு இருக்கும் சூழ்நிலையில் பணியாற்றுவது சவாலானதுதான்’ எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா தடுப்பு நிதி: ரூ.52 லட்சம் கொடுத்த ‘சின்னத்தல’