இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவுட்டை ஏற்காமல் மறுத்த கே.எல்.ராகுலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா – இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் முதல் ஆட்டம் ட்ரா ஆன நிலையில் அடுத்த இரண்டு ஆட்டங்களில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றுள்ளன.
இந்நிலையில் நான்காவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸ் முடிந்து இரண்டாவது இன்னிங்ஸ் நடந்து வருகிறது. இந்த ஆட்டத்தில் கே.எல்.ராகுல் 101 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பேர்ஸ்டோ பிடித்த கேட்ச்சில் அவுட் ஆனார். முதலில் நடுவர் அவுட் கொடுக்காத நிலையில் ரிவ்யூ கேட்கப்பட்டது. அதில் மட்டையில் பந்து பட்டது உறுதியானதால் அவுட் கொடுக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொள்ளாத கே.எல்.ராகுல் தலையை ஆட்டி மறுப்பு தெரிவித்தபடியே பெவிலியனை விட்டு வெளியேறினார். நடுவரின் முடிவுக்கு மறுப்பு காட்டியதால் கே.எல்.ராகுலின் சம்பளத்திலிருந்து 15 சதவீதத்தை அபராதமாக பிடித்தம் செய்ய ஐசிசி உத்தரவிட்டுள்ளது.