ஏற்கனவே இந்திய அணியில் ரோஹித், ராகுல், தவான் ஆகிய மூன்று தொடக்க ஆட்டக்காரர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இப்போது இஷான் கிஷானும் சிறப்பாக விளையாடியுள்ளதால் நான்காவது தொடக்க ஆட்டக்காரராக இணைந்துள்ளார். இதனால் கேப்டன் கோலிக்கு அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களை தேர்வு செய்வதில் மேலும் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே தவானின் இடம் கேள்விக்குறியாக இருந்த நிலையில் இஷான் கிஷான் இடதுகை தொடக்க ஆட்டக்காரராக வேறு இருப்பது தவானின் நிலையை மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளது. இதுபற்றி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் இஷான் கிஷான் மற்றொரு இடது கை பேட்ஸ்மேனாக வந்துவிட்டார். இனி தவானுக்கு அங்கு வேலை இருக்காது. பேசாமல் அவர் என்னுடன் வந்து கால்ப் விளையாட வேண்டியதுதான் என நகைச்சுவையாகக் கூறியுள்ளார். சமீபத்தில் கபில்தேவ் கால்ப் சங்கத்தில் உறுப்பினரானார் என்பது குறிப்பிடத்தக்கது.